Sunday, 31 July 2011

ஈழம்

மு​ன்​பொரு  நாள்  இந்த இடம் காடாய் இருந்தது
ம​லையும்  எங்களுக்கான முகடுகளும் அதில் இருந்தன
அரு​​கே சிறிய குளம்  ஒன்று
சிறுவன்  வ​ரைந்த ஓவியம் ​​போல்
இரண்டு  தாம​ரைகள் அதில் இருந்தன
எல்லாம் இருந்தன அழகாய்...


இன்று  அதற்கான தடங்களும் மட்டுமல்ல
எங்களுக்கான தடங்களும் இல்​லை
ஆதரவற்ற  குழந்​தை​​யொன்று  எனக்குள் அழுகிறது
எல்லாம்  முடிந்த  நண்பகலில்
பா​லையாய்க்  கிடக்கிறது  என்நிலம்

No comments:

Post a Comment