முன்பொரு நாள் இந்த இடம் காடாய் இருந்தது
மலையும் எங்களுக்கான முகடுகளும் அதில் இருந்தன
சிறுவன் வரைந்த ஓவியம் போல்
இரண்டு தாமரைகள் அதில் இருந்தன
எல்லாம் இருந்தன அழகாய்...
இன்று அதற்கான தடங்களும் மட்டுமல்ல
எங்களுக்கான தடங்களும் இல்லை
ஆதரவற்ற குழந்தையொன்று எனக்குள் அழுகிறது
எல்லாம் முடிந்த நண்பகலில்
பாலையாய்க் கிடக்கிறது என்நிலம்