Thursday, 4 August 2011
Sunday, 31 July 2011
ஈழம்
முன்பொரு நாள் இந்த இடம் காடாய் இருந்தது
மலையும் எங்களுக்கான முகடுகளும் அதில் இருந்தன
சிறுவன் வரைந்த ஓவியம் போல்
இரண்டு தாமரைகள் அதில் இருந்தன
எல்லாம் இருந்தன அழகாய்...
இன்று அதற்கான தடங்களும் மட்டுமல்ல
எங்களுக்கான தடங்களும் இல்லை
ஆதரவற்ற குழந்தையொன்று எனக்குள் அழுகிறது
எல்லாம் முடிந்த நண்பகலில்
பாலையாய்க் கிடக்கிறது என்நிலம்
Saturday, 30 July 2011
tamil kavithai கவிதை
யாகமாய் என்னில் புகுந்த பனிப்புகை
ஏதுமற்ற வெயிலில் கிடந்தது
எனக்குள் இருக்கும் வண்ணங்களை
ஒவ்வொன்றாய்த் தொகுத்தேன்
எழுத்தின் ஓவியமாய்ப்
பிறந்த சூட்டில் சிவந்த பஞ்சுபொதியாய்க்
கையில் தவழ்ந்தது
என்கவிதை
ஏதுமற்ற வெயிலில் கிடந்தது
எனக்குள் இருக்கும் வண்ணங்களை
ஒவ்வொன்றாய்த் தொகுத்தேன்
எழுத்தின் ஓவியமாய்ப்
பிறந்த சூட்டில் சிவந்த பஞ்சுபொதியாய்க்
கையில் தவழ்ந்தது
என்கவிதை
Friday, 29 July 2011
Subscribe to:
Posts (Atom)